செல்போன்களை திருடிய வாலிபரை போலீசார் கைது
தூத்துக்குடி அருகே 2 செல்போன்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-05-20 17:38 GMT
கைது
தூத்துக்குடி மாவட்டம் முக்கானி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் மகன் முத்துராஜ் (31). இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டு வாசல் அருகே கட்டிலில் படுத்திருந்தாராம். அப்போது அவர் அருகில் வைத்திருந்த 2 செல்போனை மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார். இதுகுறித்து முத்துராஜ் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி செல்போன் திருடிய தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்த அலிபாபா மகன் மாவீரன் (31) என்பவரை கைது செய்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தார்.