கொண்டலாம்பட்டி அருகே தீயில் கருகி வாலிபர் பலி
சேலம் கொண்டலாம்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தனக்கு தானே தீ வைத்து கொண்டதில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
Update: 2023-12-28 05:20 GMT
உயிரிழப்பு
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பி.நாட்டாமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது32). இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது. விக்னேஷ் தன்னைத்தானே தீ வைத்து கொளுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே விக்னேஷ் உடல் முழுவதும் தீப்பரவியதால் தொடர்ந்து அந்த வீட்டின் மேற்கூரையும் மற்றும் பீரோவில் இருந்த துணிகளும் தீ பற்றி எரிந்தன. இது குறித்து சேலம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிந்தவுடன். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய விக்னேஷ் இறந்துவிட்டார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.