காதலனுக்கு வேறு திருமண நிச்சயம் - இளம் பெண் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் நடைப்பெற்றதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-22 02:59 GMT

தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அடுத்த சரல் பகுதி உன்னங்குளத்தை சேர்ந்தவர் நாராயணன் இவரது மனைவி இசக்கியம்மாள் தம்பதியினரின் கடைசி மகள் பவானி (19). பிளஸ் 2 படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பவானி அவரது உறவுக்கார வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு உறவினர் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து அவசர அவசரமாக வாலிபருக்கு வேறொரு இடத்தில் பெண் பார்த்து திருமணம் பேசி முடித்தனர்.

இந்த தகவல் அறிந்த பவானி மனம் உடைந்து வீட்டில் யாரிடம் பேசாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினம் வீட்டின் படுக்கை அறையில் பவானி திடீரென தூக்கு போட்டு தொங்கி உள்ளார். வீட்டிலிருந்தவர்கள் அவரைக் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பவானி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பவானியின் தாயார் இசக்கியம்மாள் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News