இளைஞர் தற்கொலை

போளூர் அருகே இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-23 05:49 GMT

இளைஞர் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (47). இவருக்கு சதீஷ் (24), விக்னேஷ் (22) என்ற மகன்கள் உள்ளனர். விக்னேஷ் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தனது தந்தையிடம் கூறியுள்ளார். ஜெய்சங்கர் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் மன விரக்தியடைந்த விக்னேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போளூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News