வாலிபர் தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், மேல்சீசமங்கலம் பகுதியில் திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-03-23 06:31 GMT
தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது 29).இவரது தம்பிக்கு திருமணம் நடைபெற்றுவிட்ட நிலையில் ராஜதுரைக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் திருமணம் நடைபெறவில்லை. இதனால் மன விரக்தி அடைந்த ராஜதுரை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜதுரை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.