ஆர்கேஎஸ் கல்லூரியில் இளைஞர் தின விழா

கள்ளகுறிச்சியில் உள்ள ஆர்கேஎஸ் கலை அறிவியல் கல்லூரியில் இளைஞர் தின விழா கொண்டாட்டப்பட்டது.

Update: 2024-01-21 08:26 GMT
இளைஞர் தின கொண்டாட்டம்
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில் இளைஞர் தின விழா நடந்தது. விழாவிற்கு கல்லுாரி தாளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைவர் டாக்டர் மகுடமுடி முன்னிலை வகித்தார். பேராசிரியர் சோபியா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் இளைஞர் நலன் குறித்து "மாற்றத்திற்கான ஒரு துவக்கம்" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். கல்லுாரி துணை முதல்வர் ஜான் விக்டர் உறுதிமொழி வாசிக்க, அனைவரும் இளைஞர் தின உறுதிமொழி ஏற்றனர். நிர்வாக அலுவலக மோகனசுந்தர் நன்றி கூறினார். கண்காணிப்பாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News