டூ வீலர்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து

கரூர் அருகே டூ வீலர்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து. வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-03-17 13:05 GMT

வாலிபர் பலி 

கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, ஆதனூர் அருகே உள்ள சென்னாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் வயது 42. இவரது மனைவி சுகப்பிரியா வயது 37. சிவகுமார் மார்ச் 16ஆம் தேதி மாலை 6 மணி அளவில், பாலவிடுதியிலிருந்து தரகம்பட்டி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது டூவீலர் குஜிலியம்பாறை பிரிவு அருகே சென்றபோது, எதிர் திசையில், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி வயது 34 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், சிவகுமார் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் நிலை தடுமாறி டூவீலர் உடன் கீழே விழுந்த சிவகுமாருக்கு, தலை, வலது கால், வலது கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த சிவகுமாரின் மனைவி சுகப்பிரியா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சிவகுமாரின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாலவிடுதி காவல்துறையினர்.

Tags:    

Similar News