மின்சாரம் தாக்கி இளைஞா் உயிரிழப்பு
By : King 24X7 News (B)
Update: 2023-10-22 11:10 GMT
fileimage
நாகை மாவட்டம் வேதாரணியம் கருப்பம்புலம் மேலக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் வைத்தி மகன் அருண்(28). இவா், தோப்புத்துறையில் உள்ள தனியாா் இடத்தில் கிணறு அமைக்கும் பணியில் மற்ற பணியாளா்களுடன் ஈடுபட்டிருந்தாா்.
ஓய்வின்போது அதே வளாகத்தில் இருந்த மின்சார மீட்டா் வைக்கப்பட்டிருந்த கொட்டகையின் வாசலில் இருந்த இரும்பு கதவில் சாய்ந்துக் கொண்டு கீழே அமர முயற்சித்துள்ளாா். அப்போது, ஏற்கெனவே கதவில் மின் கசிவு இருந்ததால் அதன் வழியாக மின்சாரம் உடலில் பாய்ந்து, அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.