பெருமாநாடு அம்பேத்கர் நகரில் வாலிபர் மரணம்!
அம்பேத்கர் நகரில் பாலம் அருகே இறந்த நிலையில் கிடந்த வாலிபர். கணவர் இறப்பில் சந்தேகம் மனைவி புகார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-10 10:10 GMT
பெருமாநாடு அம்பேத்கர் நகரில் வாலிபர் மரணம்
அன்னவாசல் அருகே உள்ள பெருமான் நாட்டை சேர்ந்தவர் சத்யராஜ் இவர் அம்பேத்கர் நகரில் பாலம் அருகே இறந்த நிலையில் கிடப்பதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அன்னவாசல் காவல் துறையினர் சத்யராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சத்யராஜின் மனைவி பத்மினி கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தார். புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பெருமாநாடு அம்பேத்கர் நகரை சேர்ந்த முருகானந்தம் மற்றும் அன்பு செல்வன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.