இளைஞர் வெட்டி கொலை - 5 பேர் கும்பல் வெறிச் செயல்
திருப்பூர் ,கோல்டன் நகரில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞரை ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கோல்டன் நகர் கருணாகரபுரி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30) பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை வீட்டுக்கு அருகே உள்ள பேக்கரி ஒன்றில் டீ சாப்பிட்டு விட்டு வெளியே அமர்ந்திருந்தார். அங்கு இரு மொபட்டில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் வாலிபரை சுற்றி வளைத்து அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு விட்டு தப்பி சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவலறிந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி சென்ற கும்பல் குறித்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். பொதுமக்கள் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.