சொத்து தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை- இருவருக்கு அரிவாள் வெட்டு

Update: 2023-12-11 06:22 GMT

முருகேசன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கனவாய்பட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி, இவரது சகோதரர் ராஜா. இருவருக்கும் சொத்தில் பிரச்சனை உள்ள நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை இரவு) மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதில் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்ட நிலையில் பழனியாண்டின் மகன்களான முருகேசன்  37., கருப்பையா  38., மற்றும் உறவினரான பிச்சை (50) ஆகியோரை ராஜாவின் மகன்கள் செல்லதுரை, பாலையா, பொன்னுசாமி என்ற குஞ்சான் ஆகியோர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகின்றது. இதில் முருகேசன் உள்பட 3 பேரும் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் விழுந்தனர். உடனே அவர்களின் அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. மேலும் கருப்பையா மற்றும் பிச்சை ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சனையால் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News