மின்மாற்றி பணியில் இருந்த போது தவறி கீழே விழுந்த இளைஞர் படுகாயம் !
மின்மாற்றியில் பணியில் இருந்த போது தவறி கீழே விழுந்த இளைஞர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.;
விசாரணை
மின்மாற்றியில் பணியில் இருந்த போது தவறி கீழே விழுந்த இளைஞர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி, ஷா நகர் மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வருபவர் முத்துசாமி மகன் மணிகண்டன் வயது 26. இவர் ஏப்ரல் ஆறாம் தேதி மதியம் 12 1/4 மணி அளவில், பள்ளப்பட்டி மேற்கு தெருவில் ஒரு மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக, மின்மாற்றியில் ஏறி பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்மாற்றிலிருந்து கால் இடறி கீழே விழுந்தார்.இதில் மணிகண்டனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த பள்ளப்பட்டி மின்வாரிய உதவி பொறியாளர் சையத் பஷீர் அப்பாஸ், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.