பைக் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் படுகாயம்
கன்னியாகுமரி மாவட்டம், மூலச்சல் பகுதியில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜெய கென்னடி. இவர் தற்போது குடும்பத்துடன் மண்டைக்காடு பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இவரது மகன் ஜெபின் (25). அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஐஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை நாகர்கோவிலுக்கு பைக்கில் சென்று விட்டு வீடு திரும்பினார். நுள்ளி விளை - திங்கள் நகர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது மொட்ட விளை என்ற பகுதியில் வைத்து எதிரே வேகமாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜெபினுக்கு தலை உள்ளிட்ட உடலில் பல பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டு, இதில் சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பம் குறித்து அவரது தாயார் சுதா என்பவர் இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் அரசு பஸ் டிரைவர் மேல்மிடாலம் பகுதியைச் சேர்ந்த கென்னடி கில்பர்ட் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.