வந்தே பாரத் ரயில் மோதி வாலிபர் பலி
அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-12 10:18 GMT
பலியானவர்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் தினேஷ்குமார் (26). இவர் நேற்று மாலை அரக்கோணம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது சென்னையில் இருந்து மைசூரு வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.