திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை
திருமணமாகாத விரக்தியில் திருநாகேஸ்வரத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-04-04 11:15 GMT
தற்கொலை
கும்பகோணம் அருகே சன்னாபுரம் செங்குந்த முதலியார் தெரு சேகர் என்பவரது மகன் முருகன் வயது 29. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இங்கு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த இவர் திருநாகேஸ்வரம் திருவிடைமருதூர் இடையே பாசஞ்சர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் அவரது உடல் பாகங்களை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.