குளத்தில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
விராலிமலை அருகேயுள்ள குடுமியான்மலை நெல்லி குளத்தில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-05-13 06:12 GMT
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் மகன் ராஜபாண்டியன் (40). திருமணம் ஆன இவருக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நண்பர்களோடு சேர்ந்து அதேஊரில் உள்ள நெல்லி குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் அங்கு வந்து அதிகாலை ராஜபாண்டியனை சடலமாக மீட்டனர். அன்னவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.