திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை வாலிபர் தற்கொலை
சேலம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த வாலிபர் திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-02-07 01:59 GMT
வாலிபர் தற்கொலை
சேலம், சீலநாயக்கன்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 28), தனியார் நிறுவன ஊழியர். இவருடைய குடும்பத்தினர் இவருக்கு பெண் பார்த்து வந்தனர். ஆனால் பொருத்தமான வரன் அமையாததால் அவரின் திருமணம் தள்ளிவந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிலம்பரசன் மன உளைச்சல், விரக்தியில் இருந்தார்.
நேற்று முன்தினம் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் அங்கு சென்று உடலை மீட்ட போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிலம்பரசனின் தாயார் வினோதா அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.