காங்கேயத்தில் சாலையின் நடுவே தோண்டப்படும் குழிகள் பொதுமக்கள் அவதி!!

காங்கேயம் - திருப்பூர் சாலையில் குடிநீர் குழாய் சரி செய்ய தோண்டப்பட்ட குழி இடையூறாக இருப்பதால் அதனை விரைந்து மூட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2024-04-07 04:32 GMT

சாலை நடுவே பள்ளம்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் திருப்பூர் சாலையில் 1-வது வார்டு திருவிக நகர்,ஏசி நகர் மற்றும் சின்னாய்புதூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரிவு உள்ளது. கடந்த சில மாதங்களாக காங்கேயம் பகுதியில் குடி நீர் குழாய் இணைப்புக்காக அனைத்து பகுதிகளிலும் குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. அந்த வகை யில் காங்கேயம் திருப்பூர் சாலையில் இருந்து திருவிக நகர் திரும்பும் பிரிவில் சாலையின் குறுக்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் இந்த சாலையை கடந்து செல்ல சிரமப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கோடை காலம் என்பதாலும் இப்பகுதியிலுள்ள 7 வீதிகளிலுள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் தட்டுபாடு நிலவி வருகிறது. எனவே பொதுமக்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியில் தோண்டப்பட்ட குழிகளை சீரமைத்தும், தண் ணீர் தட்டுபாட்டை தீர்க்கவும் வழி வகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News