விஷ சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனாலை சட்டத்திற்கு புறம்பாக யாரும் விற்பனை செய்யக்கூடாது: மருத்துவத்துறை

Update: 2024-06-20 05:30 GMT

Kallakurichi Death

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை தொடர்ந்து, தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த சாராயத்தில் அதிகப்படியான அளவு மெத்தனால் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் சட்டவிரோதமாக மெத்தனால் விற்கப்பட்டதும் அம்பலம் ஆகி உள்ளது. இந்த நிலையில், விஷ சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனாலை சட்டத்திற்கு புறம்பாக யாரும் விற்பனை செய்யக்கூடாது என்று மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News