சென்னை – லண்டன் செல்லும் விமானம் ரத்து!!

Update: 2024-08-08 05:01 GMT

chennai flights cancelled

சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் சென்னை வரவில்லை. நடுவானில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் லண்டனுக்கே திரும்பி சென்று விமானம் தரை இறங்கியது. விமானம் ரத்து செய்யப்பட்டதால் சென்னையில் இருந்து லண்டன் செல்ல தயாராக இருந்த 210 பயணிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், லண்டன் செல்ல இருந்த 210 பயணிகளும் தனியார் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு நாளை லண்டன் அனுப்பப்பட உள்ளனர்.

Similar News