தியாகிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
By : King 24x7 Desk
Update: 2024-08-15 05:53 GMT
CM Stalin
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20,000ல் இருந்து ரூ.21,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.11,000ல் இருந்து ரூ.11,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் கட்டபொம்மன், வ. உ. சி, மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ.10,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.