இலங்கை வசமுள்ள படகுகளையும், மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!
By : King 24x7 Desk
Update: 2024-09-10 05:37 GMT
முதல்வர் ஸ்டாலின்
இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதில், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையை தள்ளுபடி செய்திடவும், கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை விரைந்து நடத்திட தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.