சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!!
By : King 24x7 Desk
Update: 2024-09-18 05:16 GMT
Train
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளனர். சென்னை கடற்கரை ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்துள்ளனர். திருவள்ளூருக்கு இரவு 8.05க்கும் கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45க்கும் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது