சென்னையில் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு!!
By : King 24x7 Desk
Update: 2024-10-10 06:11 GMT
chennai flights cancelled
சென்னையில் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பூஜை, திருவிழா, தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு விமானத்தில் செல்வோர் அதிகரித்துள்ளனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, சேலம், தூத்துக்குடி செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை – மதுரை வழக்கமான விமான கட்டணம் ரூ.4,200 என இருந்த நிலையில், தற்போது ரூ.12,026 – ரூ.18,626 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.