போதை பொருட்கள் விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர் மீது வழக்கு பதிவு!!

Update: 2024-11-29 06:18 GMT

 வழக்கு

மெத்தபெட்டமையின் போதை பொருட்கள் விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஜேம்ஸ், அவரது நண்பர் சுரேந்தர்நாத்தை கைது செய்தனர். காவலர் ஜேம்சும், அவரது நண்பரும் மெத்தபெட்டமையின் விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காவலரும், நண்பரும் வடபழனி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இருவரிடமும் 10 கிராம் மெத்தபெட்டமையின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Similar News