காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நம்மை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
By : King 24x7 Desk
Update: 2024-12-05 07:01 GMT
காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நம்மை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் 2-வது ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காலநிலை மாற்றம் தொடர்பாக தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.500 கோடியில் 5,000 சிறிய நீர் பாசனங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.