திருப்பதி மலைச்சாலையில் பாறைகள் சரிந்ததால் பரபரப்பு!!
By : King 24x7 Desk
Update: 2024-12-12 09:23 GMT
திருப்பதி மலைப் பாதையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2-வது மலைப்பாதையில் ஹரிணி நிழற்பந்தல் அருகே பாறைகள் சரிந்து விழுந்தன. திருமலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் பாறைகள் சரிந்து விழுந்தன. பாறைகள் சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.