அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!!
By : King 24x7 Desk
Update: 2025-01-03 06:17 GMT
வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை அடுத்து அவரது வீட்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் துரைமுருகன் வீடு, அவருக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதோடு வேலூரில் எம்.பி. கதிர் ஆனந்த் வசிக்கும் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.