காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கையை கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டம்!!

Update: 2025-02-11 06:34 GMT

fishermen

காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கையை கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களை கைதுசெய்வதை இலங்கை கடற்படை கைவிட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ள காரைக்கால் மீனவர்கள் பிப்.14-ல் சாலை மறியலில் ஈடுபட உள்ளனர்.

Similar News