கூட்டணி பற்றி பேச இன்னும் நிறைய காலம் உள்ளது: அண்ணாமலை
By : King 24x7 Desk
Update: 2025-03-28 12:10 GMT

annamalai
கூட்டணி பற்றி பேச இன்னும் நிறைய காலம் உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என டெல்லியில் அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது, பாஜக யாருடன் கூட்டணி என்பது குறித்து தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. மைக் எடுத்து பேசி கைகாட்டி விட்டுப்போவதில்லை அரசியல்; களத்துக்கு வரவேண்டும் என மீடியா வெளிச்சத்துக்காக பிரதமர் குறித்து விஜய் பேசுகிறார் என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.