தமிழ்நாடு முழுவதும் ஏப்.5ம் தேதி சிறப்பு முகாம்: தமிழ்நாடு மின்வாரியம்
By : King 24x7 Desk
Update: 2025-04-02 13:02 GMT

TNEB
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்.5ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. மின்நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது. மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் குறித்து புகார் அளிக்கலாம்.