வேளாங்கண்ணியில் ரூ.18 கோடியில் கடல் அரிப்பு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்: தமிழ்நாடு அரசு
By : King 24x7 Desk
Update: 2025-04-03 07:27 GMT

Tn govt
வேளாங்கண்ணியில் ரூ.18 கோடியில் கடல் அரிப்பு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன் இறங்குதளம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலை, அண்ணா காலனியில் ரூ.15 கோடியில் மீன்இறங்குதளங்கள் அமைக்கப்படும். 200 நாட்டுப்படகு மீனவர்களுக்கு கணவாய் மீன்பிடி உபகரணங்கள் வாங்கி ரூ.40 லட்சம் மானியம் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.