தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கேட்ட ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!
By : King 24x7 Desk
Update: 2025-05-15 07:18 GMT
CM Stalin
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கேட்ட ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; ஒன்றிய அரசின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் தீர்த்து வைத்த பிரச்சனையை மாற்றும் முயற்சி. பாஜகவின் சொல்படியே தமிழ்நாடு மக்களுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்பட்டார் என்பதை ஒன்றிய அரசின் நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் நடவடிக்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை பலவீனப்படுத்தும் முயற்சி. அரசியலமைப்பு சட்டத்துக்கு இறுதி விளக்கம் அளிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கே உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.