தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர் குன்றக்குடி அடிகளார் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
By : King 24x7 Desk
Update: 2025-07-11 05:04 GMT
CM Stalin
தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர் குன்றக்குடி அடிகளார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று! தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்! சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர்!”இவ்வாறு தெரிவித்தார்.