உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று தொடக்கம்!!

Update: 2025-08-29 05:20 GMT

Annai Velankanni Church 

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி, பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு பேராலய ஆண்டு பெருவிழா இன்று (29ம் தேதி) மாலை 6 மணிக்கு கொடியேற்றதுடன் தொடங்குகிறது. தஞ்சை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார். தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர்வாதம், தமிழில் திருப்பலி நடைபெற இருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. பின்னர், செப்.8ம் தேதி புனித ஆரோகிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்க இருக்கிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்வும் நடக்க இருக்கிறது.

Similar News