வாக்குத் திருட்டால் ஹரியானா தேர்தல் முடிவு மாறியது: ராகுல் காந்தி
By : King 24x7 Desk
Update: 2025-11-05 08:43 GMT
rahulgandhi
ஹரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாலேயே காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஹரியானாவில் வழக்கத்துக்கு மாறாக தபால் ஓட்டுகள் அனைத்துமே வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளுக்கு எதிராக இருந்தன. அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்கிரசுக்கே வெற்றி என கூறின. மோசடிகள் நடக்காமல் இருந்திருந்தால் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறினார்.