பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
By : King 24x7 Desk
Update: 2026-01-13 04:38 GMT
பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தை முதல்நாள், கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படும் நாள்; இந்த ஆண்டில் இன்னும் கூடுதலாக மகிழ்ச்சி இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது. தை முதல் நாளில் தமிழர்களின் இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும். இந்த மகிழ்ச்சி நம் அனைவருக்கும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.