புதுச்சேரியில் இரவு 10 மணிக்குள் அனைத்து சாராயக் கடைகளும் மூட வேண்டும்: காவல்துறை
By : King 24x7 Desk
Update: 2024-07-19 06:51 GMT
pondicherry
புதுச்சேரி சாராயக்கடை உரிமையாளர்கள், வியாபாரிகள், சாராயக்கடை வழக்கில் சிக்கியவர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் இரவு 10 மணிக்குள் அனைத்து சாராயக் கடைகளும் மூடப்படவேண்டும். அனைத்து சாராயக்கடைகளையும் இரவு 10 மணிக்குள் மூடாவிட்டால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.