ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சைபர் கிரைம் மோசடியில் ரூ. 1010 கோடியை பொதுமக்கள் இழப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-09-09 05:45 GMT
சைபர் மோசடி
2025 ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சைபர் கிரைம் மோசடியில் ரூ. 1010 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 7 மாதங்களில் 88,479 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இழந்த பணத்தில் ரூ. 314 கோடியை சைபர் கிரைம் முடக்கி இருப்பதாகவும், ரூ.62 கோடியை மீட்டு புகார்தாரரிடம் கொடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.