பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 3 பேர் கைது!!
By : King 24x7 Desk
Update: 2024-08-08 05:07 GMT
கைது
பழவந்தாங்கலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பழவந்தாங்கலில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 மாணவன் வகுப்பறையில் போதையில் தள்ளாடியபடி இருப்பதாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற அவர், மாணவனை நெருங்கியபோது அவன் கஞ்சா புகைத்திருப்பது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அந்த மாணவன் கஞ்சாவை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் வாங்கியதாக கூறியதை அடுத்து அங்கு சென்ற போலீசார் 3 பேரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.