நாமக்கல்லில் 6 பேர் கிட்னி விற்பனை!!
By : King 24x7 Desk
Update: 2025-07-19 05:47 GMT
namakkal
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 பேரின் சிறுநீரகம் விற்கப்பட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. ஆறு நபர்களில் ஐந்து நபர்கள் போலியான முகவரியைப் பயன்படுத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கிட்னி திருட்டு கும்பலே போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்துள்ளது. சிறுநீரகம் தானமாக பெற்றவரின் உறவினர் என இந்த சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வீடியோ வெளியிட்ட பெண்ணிடம் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் விசாரணை நடத்தி வருகிறார்.