சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் ரூ.75.70 கோடி மதிப்பீட்டில் புதிய மாமன்ற கூடம் கட்ட அரசின் நிர்வாக ஒப்புதல் கோரி தீர்மானம்!!
By : King 24x7 Desk
Update: 2025-01-30 06:15 GMT
சென்னை மாநகராட்சி
சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் ரூ.75.70 கோடி மதிப்பீட்டில் புதிய மாமன்ற கூடம் கட்ட அரசின் நிர்வாக ஒப்புதல் கோரி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. 3 மாடி கொண்ட கட்டடமாக 94,760 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. அதில் ஆலோசனை கூடம், மன்ற கூடம், மேயர் அலுவலகம், துணை மேயர் அலுவலகம், பொது மக்கள் காத்திருப்பு இடம், பத்திரிக்கையாளர் மாடம், பொது மக்கள் மாடம், உணவு அருந்தும் இடம் ஆகியவை இக்கட்டடத்தில் அமையவுள்ளன.