தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் புரட்டிப்போட்டுள்ளது: அப்துல்லா எம்.பி.
By : King 24x7 Desk
Update: 2024-12-03 06:32 GMT
தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் 8 மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் அப்துல்லா தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகள், சாலைகள், ரயில் பாலங்கள், மின்கட்டமைப்பு, வேளாண் பயிர்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கான மக்களை புயல் துயரத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக ரூ.2000 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.