2026 தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: ஓ.பி.எஸ்
By : King 24x7 Desk
Update: 2025-10-27 07:47 GMT
ops
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவில் பங்கேற்ற பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டிஅளித்தார். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்தால் சுட்டிக்காட்டுவது நமது கடமை. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் என தெரிவித்தார்.