ஒன்றிய அரசின் பல்லாயிரம் கோடி ஒப்பந்தம் பெற்ற மேகா நிறுவனம்
By : King24x7 Rafi
Update: 2024-03-15 05:24 GMT
மேகா இன்ஜினியரிங் என்ற நிறுவனம் 11 ஏப்ரல் 2023ல் ரூ.100 கோடியை தேர்தல் பத்திரம் மூலம் கொடுத்திருக்கிறது. ஒரே மாதத்தில்,ரூ.14,400 கோடி மதிப்பிலான சுரங்க சாலை கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது மகாராஷ்டிரா அரசு.அந்நிறுவனம் எந்த கட்சிக்கு நிதி வழங்கியது என்ற தகவலை SBI வெளியிடவில்லை. இருப்பினும் சில நிறுவனங்கள் கொடுத்த நிதியும், அது எந்த கட்சிக்கு கொடுக்கப்பட்டது என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.