அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் மீது போடப்பட்ட 5000க்கும் மேற்பட்ட வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் உத்தரவு: மல்லை சத்யா நன்றி
By : King24x7 Rafi
Update: 2024-07-26 07:30 GMT
sathya
10 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் வகையில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள் மீது போடப்பட்ட 5000க்கும் மேற்பட்ட வழக்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ரத்து செய்ததில், என் மீதான 25க்கும் மேற்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது. இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.