தமிழகத்தின் கடனை பற்றி பேசுகிற அண்ணாமலை பாஜக அரசின் கடன் சுமை ரூ.100 லட்சம் கோடி குறித்து பதில் சொல்வாரா?.. கே.எஸ்.அழகிரி கேள்வி
By : King24x7 Rafi
Update: 2024-01-07 05:42 GMT
தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்து விடும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார். நறுக்கென்று ஒரே வார்த்தையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஒன்றிய அரசுக்கு ரூ. 1 வரியாக வழங்கினால் 29 பைசா தான் திரும்பி வருகிறது என்று கூறியிருக்கிறார். இதற்கு நேரிடையாக பதில் கூறாமல் நிர்மலா சீதாராமன் விதண்டாவாதங்களை பேசி வருகிறார். இதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.