நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் வருமா? பயணிகளிடம் கட்டண கொள்ளையை தடுக்க கோரிக்கை
By : King24x7 Rafi
Update: 2024-05-16 05:27 GMT
Auto
நாகர்கோவிலில் கட்டண கொள்ளையை தடுக்க ப்ரீ பெய்டு ஆட்டோ திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் மிக அதிகமாக உள்ளது. இதில் மற்ற நகரங்களை விட, குமரி மாவட்டத்தில் தாறுமாறான கட்டணம் வசூலிக்கிறார்கள். குறைந்த பட்சம் கட்டணம் ரூ.40, 50 என்ற நிலையில் இருந்து மாறி தற்போது ரூ.60 என நிர்ணயம் செய்துள்ளனர். பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் இருந்து செல்ல இவ்வளவு தான்? கட்டணம் என்றில்லை. நெஞ்சம் பதறும் வகையில் ஆட்டோ டிரைவர்கள் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளனர். நியாயமான கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில், ஒரு சில ஆட்டோ டிரைவர்களின் இந்த அடாவடி கட்டணம் வசூல் பயணிகளை மிகவும் துன்பத்துக்கு உள்ளாக்கி உள்ளது.