கொல்லிமலை அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
Update: 2024-12-14 04:55 GMT
தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக கொல்லிமலையில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் தடை விதித்துள்ளார் நம்ம அருவி / மாசிலா அருவி / ஆகாய கங்கை போன்ற பெரிய அருவிகள் மட்டும் இல்லாமல் சிற்றறிவுகளும் புளியஞ்சோலை அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பினால் தடை விலகப்படும் என தகவல். மேலும் நேற்று கொல்லிமலையில் 10 இருக்கும் மேற்பட்ட இடங்களில் நிலசரிவு மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவே கொல்லிமலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மிக கவனத்துடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது