தமிழ்நாட்டில் முதன்முறையாக ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பஸ்கள்
By : King24x7 Rafi
Update: 2024-06-15 05:00 GMT
bus
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த மார்ச் 6ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட் இணைந்து நடத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். அப்போது இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் விரைவில் சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிரப்பும் வசதி துவங்கப்படும். அரசு பஸ்களில் சிஎன்ஜி வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.